Sever என்றால் என்ன?
இந்த தொலைபேசித் தடங்கள் வழியாக இணைக்கபட்டிருக்கும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்கள் வெப் சர்வர் (web server) என்ற மென்பொருள் மூலமாக இன்டர்நெட் சேவைகளைத் தருகிறது. இந்த சேவைகள் :
a) WWW (world wide web) - வெப் தளங்கள்
b) Email - மின்னஞ்சல்
c) FTP - File transfer protocol - ஃபைல் பரிமாற்றம்
இந்த சேவைகள் கிளையன்ட் / சர்வர் முறையை அடிப்படையை கொண்டதாகும்.
கிளையன்ட் (Client)
கிளையன்ட் என்பது உங்களது கணிப்பொறியில் உள்ள பிரவுசரை(Browser) குறிக்கும். எடுத்துக்காட்டாக மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர் (Internet Explorer), நெட்ஸ்கேப் நேவிகேட்டர் (Netscape Navigator) , ஆபெரா (Opera) ,ஃ பயர் ஃ பாக்ஸ் (Firefox ) முதலியவை.
பிரவுசரானது தகவல்கள் சேமிக்கபடுள்ள சர்வர் கணிப்பொறியைத் தொடர்புக் கொண்டு தேவையான தகல்வகளைக் கேட்கும். சர்வர் கணிப்பொறியில் நிறுவப்பட்டுள்ள வெப் சர்வர் புரோகிராமனது உரிய தகவல்களை தேடிப் பிடித்து பிரவுசருக்கு அனுப்பி வைக்கும். பிரவுசர் இந்தத் தகவல்களை பெற்று கணிப்பொறித் திரையில் உரிய வடிவத்தில் காட்டும். பிரவுசர்கள் சர்வரைத் தொடர்புக் கொள்ளும்போது , எச்டிஎம்எல் (html - hyper text markup language) என்ற ஹைபர் டெக்ஸ்ட் மார்க் அப் மொழியில் எழுதப்பட்ட பக்கங்களை பெற்று சரியான வடிவில் காட்டும்.
வெப் செர்வர் என்பது ஒரு Application அல்லது ஒரு Software ஆகும்.
( ஆனால் சில சமயங்களில் வெப்செர்வர் Application பயன்படுத்தப்படும் கணினிகளும் வெப்செர்வர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.)
இணையம் அதாவது INTERNET ஆனது, Client- Server முறையில் செயல்படுகிறது.
இணையத் தொழில்நுட்பத்தில்...
வெப் செர்வர் என்பது SERVER எனில் CLIENT என்பது எது ?
அதுதான் Browser ஆகும்.
உதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் Internet Explorer, Firefox, Google Chrome போன்ற அனைத்து Browser - களும் Client soft wares - ஆகும்.
Client -கள் கேட்கும் தகவலை கொடுக்க வேண்டியது ஒரு Server - ன் பணி.
CLIENT தகவல் கேட்கும் செயல் - REQUEST எனப்படும்.
SERVER தகவல் கொடுக்கும் செயல் - RESPONSE எனப்படும்.
ஒவ்வொரு வெப் செர்வரும் ஒரு - Default Folder ஐ க் கொண்டிருக்கும்.
அந்த Folder - க்குள் நமது இணைய பக்கங்களை சேமித்து வைக்க வேண்டும்.
அப்படி வைக்கும் போது நமது இணையப்பக்கங்களானது உலகில் மற்றவர்களால் பார்வையிட முடியும்.
Default Folder அல்லாமல் வேறொரு இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இணையப்பக்கங்களையும் Virtual Directory என்ற முறையில் பயன்படுத்தலாம்.
For More Information Click on Below Link↓↓↓↓↓
No comments:
Post a Comment